ETV Bharat / state

கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை - அனிதா ராதாகிருஷ்ணன் - etv bharat

கடற்பாசியை பாதுகாக்க கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Aug 28, 2021, 7:47 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆக. 28) நடைபெற்றது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, "கடல்நீர், உவரி நீர் மூலமாக மீன்பிடி செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் நலன் காக்க கருணாநிதி ஆட்சி காலத்தில் மீனவ நல வாரியம் தனியாக அமைக்கப்பட்டது. மீன்பிடி தடைக்காலத்தில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

மீன்பிடிக்க பயன்படுத்தும் நாட்டுப்படகிற்கு மண்ணெண்ணெய் வாங்க ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வழங்கினார். குளச்சல், தேங்காய்பட்டணம், நாகை மீன்பிடி துறைமுகத்தை கலைஞர் அமைத்துக்கொடுத்தார். மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை தாக்காமல் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி இருநாட்டு தலைவர்களும் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் விதத்தில் அதன் ஆதாரங்களை அரசு ஊக்குவிக்கும். கடற்பாசியை பாதுகாத்திட கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி துறைமுகங்களில் சரக்கு இறங்கு தளம் சர்வதேச அளவில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்குஞ்சுகள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும்

மீனவர்களிடையே வேலை வாய்ப்பை பெருக்கவும், உள்நாட்டு மீன்குஞ்சுகள் உற்பத்தியை பெருக்கிடவும் அரசு ஊக்குவிக்கும். வண்ண மீன் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய கொளத்தூர் பகுதியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் வர்த்தக மையம் அமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகள் பேரவையில் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.