ETV Bharat / state

திருமுல்லைவாயலில் ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - சென்னை

சென்னை: திருமுல்லைவாயலில் உள்ள ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து நள்ளிரவு கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.

_andhra_bank_try_to_seal
author img

By

Published : Aug 29, 2019, 10:46 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் ஆந்திர வங்கி கிளை இயங்கி வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவில் வங்கிக் கதவின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். வங்கியின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா உள்ளே இருந்த எச்சரிக்கை ஒலிபெருக்கி ஆகியவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் வங்கி லாக்கரின் உலோகம் பலமாக இருந்ததால் உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதை தொடர்ந்து இன்று காலை வங்கிங்கு வந்து பார்த்த அலுவலர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

இது பற்றி பேசிய வங்கி மேலாளர் ஜெயசந்திரன், லாக்கருக்கான பாதுகாப்பு உறுதியாக இருந்ததால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியதாக தெரிவித்தார்.

திருமுல்லைவாயல் செந்தில் நகர் பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளதோடு, காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Intro:சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.Body:சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆந்திர வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் நேற்று நள்ளிரவில் வங்கியின் கேட், கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். வங்கியின் வெளியே இருந்த கேமரா, உள்ளே இருந்த அலாரம் ஆகியவற்றை செயலிழக்க செய்து லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் லாக்கரின் பாதுகாப்பு பலமாக இருந்ததால் உடைக்க முடியவில்லை. அதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியதாகா வங்கியின் மேலாளர் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, செந்தில் நகர் பகுதியில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.