ETV Bharat / state

சந்திரயான் 3 குறித்து பள்ளிப் பாட புத்தகத்தில் இடம் பெறும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Anbil Mahesh: நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த சந்திரயான் 3 திட்டம் குறித்து பள்ளிப் பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Anbil Mahesh Poyyamozhi
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:45 PM IST

Updated : Sep 1, 2023, 6:18 PM IST

சந்திரயான் 3 குறித்து பள்ளிப் பாட புத்தகத்தில் இடம் பெறும்

சென்னை: நிலவில் கால் பதித்த சந்திரயான் 3 திட்டம் குறித்து பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வினை மாற்றி வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்குவதற்கு உரிய பரிந்துரை தயார் செய்யப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளோம். அதற்கு நீதிமன்ற வழிகாட்டுதல் பெறப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் கூடல் தொடங்குவதற்காக கடந்தாண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (செப்டம்பர் 1) சென்னை மாவட்டத்தில் உள்ள 162 அரசுப் பள்ளிகளுக்கான நிதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கூடல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 ஆயிரம் ரூபாய் என 6,500 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் கூடல் மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கான பாட்டு, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில் தமிழ் வளர்ப்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

தமிழ் கூடலும் மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும். தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். சந்திரயான் 3 நிலவில் இறங்கும் நேரத்தை இஸ்ரோ முன்கூட்டியே அறிவித்ததால், அதனை பார்ப்பதற்கு அனைவரும் அமர்ந்திருந்தோம்.

அது நிலவில் கால் பதித்தது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வாகும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனையை எடுத்துக்காட்டும் வகையில் சந்திரயான் 3 திட்டம் குறித்து பாடப்பகுதியில் இடம் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.. கலக்கத்தில் லாரி உரிமையாளர்கள்.. எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

மேலும், “நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு இது போன்ற வன்முறைகளை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு கூடுதலாக ஒரு தேர்வை நடத்தாமல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்குரிய பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் இது குறித்து எங்களிடம் கேட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 149 அரசாணை திரும்பப் பெறுவதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றத்தின் மூலம் வழிகாட்டுதல் பெறப்படும்.

தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக நடத்துவதற்கு தனியார் பள்ளி நிர்வாகம், உங்களுடன் இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் மூலம் வட மாநிலங்களுக்குச் சென்று, அங்குள்ள நிலைமை என்ன என்பதையும், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கண்கூடாக பார்த்த பிறகு ஆளுநர் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநிலக் கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டாலும், தமிழக முதலமைச்சரின் உரிய நடவடிக்கை மூலம் ஒப்புதல் பெற முயற்சி எடுக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாணவி அனிதா இறந்த நினைவு நாள் இன்று. அவர் இறந்தபோது அவர் உடல் அடக்கம் செய்யும் வரையில் இருந்தோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.

நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போதும், அதிமுகவும் இணைந்து போராட வேண்டும் எனவும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் எனவும் கூறினார். சேலத்தில் நடைபெறும் மாநாடு நீட் தேர்வினை ரத்து செய்வதை வலியுறுத்தும். ஒவ்வொரு இளைஞர்களும் நீட் தேர்விற்கு எதிராக போராட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: One Nation, One Election: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு!

Last Updated : Sep 1, 2023, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.