ETV Bharat / state

நிதி அமைச்சருடன் பள்ளிக்கல்வி அமைச்சர் திடீர் சந்திப்பு - நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை தொடர்பாக நிதி அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்த நிலையில் இன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2023, 4:08 PM IST

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களுடன் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசி இருப்பதால், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சருடன் பள்ளிக்கல்வி அமைச்சர் திடீர் சந்திப்பு

கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் எழுத்துப்பூர்வமான கோரிக்கை கடிதங்களையும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் அளித்தனர். குறிப்பாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய திட்டம் , புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமாக இடம் பெற்றிருந்தன.

ஆசிரியர் சங்க தலைவர்களின் கோரிக்கை தொடர்பாக நிதி அமைச்சருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்திருந்தார். அதன்படி இன்று (ஆக.07) தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் நிதியமைச்சரை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.