ETV Bharat / state

ரஜினி எப்போது அரசியலுக்கு வருகிறார்? அமமுக புகழேந்தி - ammk spokes person pugazhendhi

சென்னை: பாஜக-வை புகழும் ரஜினி, எப்போது அரசியலுக்கு வரபோகிறார் என்பதை அவரை நம்பியிருக்கும் ரசிகர்களுக்கு முதலில் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
author img

By

Published : Aug 13, 2019, 10:49 PM IST

சென்னை விமான நிலையத்தில் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அத்திவரதர் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளரிடம் மோசமாக நடந்திருக்கக் கூடாது. அத்திவரதரை அமைச்சர்கள் வரிசையில் சென்று தரிசித்து இருந்தால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஒரு தேநீர் குடித்துக்கொண்டு, லாவகமாக காவல் ஆய்வாளருடன் ஆட்சியர் உரையாடியிருக்கலாம்.

காவல் ஆய்வாளரை, ஆட்சியர் மிரட்டியது பணியிலிருக்கும் காவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு காவல் அலுவலர் தவறு செய்யும்பட்சத்தில், அவரை நேரில் அழைத்துப் பேசி வருத்தம் தெரிவித்திருந்தால், அது காவலர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். வீரப்பனைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், உடல்நலம் பாதித்தபோதும் ஏழு மணி நேரம், காவல் துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து விருதுகளை வழங்கியவர் ஜெயலலிதா.

பிரதமர் மோடி உத்தர்காண்ட் காட்டில் சென்று பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரியும் காடுதான். காஷ்மீர் போல் சிதைந்துள்ளது. நீலகிரிக்கு வந்து மக்களைச் சந்தித்து நிவாரண பணிகளைச் செய்ய வேண்டும். அதுபோல் கேரளா, வட கர்நாடக போன்ற இடங்களைப் பிரதமர் வந்து பார்த்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். ‘காட்டிற்குச் சென்ற பிரதமர் நீலகிரிக்கு வருவாரா?’ என்பதை பாஜகதான் சொல்ல வேண்டும்.

கட்சியைப் பதிவு செய்து நிரந்தரமாகச் சின்னம் கிடைக்க வேண்டும். அதற்கு முன் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டால், வேறு சின்னங்களில்தான் தேர்தலை சந்திக்க நேரிடும் என்று பொதுச்செயலாளர் சொல்லியுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்தது வருத்தமாகத்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

மேலும் ரஜினி குறித்துப் பேசும்போது, “அமித்ஷாவைப் பாராட்டிதான் ஆக வேண்டும். பாராட்டுவது ரஜினியின் குணம். அர்ஜுனன், கிருஷ்ணனாக மோடியும், அமித்ஷாவும் இருந்துவிட்டுப் போகட்டும். ரஜினி எப்போது அரசியலுக்கு வரப்போகிறார். இவரை எப்போது மக்கள் பாராட்டப் போகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Intro:இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை அமமுக புறக்கணிக்க கூடாது பெங்களூர் புகழேந்தி பேட்டி
Body:இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை அமமுக புறக்கணிக்க கூடாது பெங்களூர் புகழேந்தி பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மோசமாக நடந்து இருக்க கூடாது. அத்திவரதரை அமைச்சர்கள் வரிசையில் சென்று தரிசித்து இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். போலீஸ் அதிகாரியை கலெக்டர் விரட்டியதால் கடந்த 2 தினங்களாக பாதுகாப்பு பணியில் உள்ளா போலீசார் கடமையை செய்வதாக கூறி காலதாமதம் ஏற்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்து பேசி வருத்தம் தெரிவித்தால் போலீசாருக்கு ஆறுதலாக இருக்கும்.

வீரப்பனை சுட்டு கொன்ற சம்பவத்தில் போலீசாருக்கு உடல்நலம் பாதித்தபோதும் 7 மணி நேரம் விருதுகளை ஜெயலலிதா வழங்கினார்.

பிரதமர் மோடி உத்தர்காண்ட் காட்டில் சென்று பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரியும் காடு தான். காஷ்மீர் போல் சிதைந்து உள்ளது. நீலகிரிக்கு வந்து மக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்ய வேண்டும். அதுப்போல் கேரளா, வட கர்நாடக போன்ற இடங்களை பிரதமர் வந்து பார்த்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். காட்டிற்கு சென்ற பிரதமர் நீலகிரிக்கு வருவாரா என்பதை பா.ஜ.க. தான் சொல்ல வேண்டும்.

கட்சியை பதிவு செய்து நிரந்தரமாக சின்னம் கிடைக்க வேண்டும். அதற்கு முன் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டால் வேறு சின்னங்களில் தான் சந்திக்க நேரிடும் என்று பொதுசெயலாளர் சொல்லியுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்தது கஷ்டமாக தான் உள்ளது. வேறு வழியில்லாமல் செய்யப்பட்டது. இந்த நிலை தொடர கூடாது.

அமமுக கட்சியை பதிவு செய்தற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக தாமதமாகி வருகிறது. விரைவில் பதிவு செய்யப்படும்.

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி கைக்கு வரும் வரை தொடர்ந்து போராடுவோம்.

அந்த கூட்டத்தில் பேசும்போது அமீத்ஷாவை பாராட்டி தான் ஆக வேண்டும். பாராட்டுவது ரஜினியின் குணம். அர்ஜுனன், கிருஷ்ணன் ஆக இருந்து விட்டு போகட்டும். ரஜினி எப்போ அரசியலுக்கு வரபோகிறார். இவரை எப்போது மக்கள் பாராட்ட போகிறார்கள். பாராட்டுவது முக்கியமல்ல. ஏற்கனவே சொன்னது என்ன என்பது தான் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.