ETV Bharat / state

ஓபிஎஸ் தயாராக இருந்த போதிலும் ஈபிஎஸ் இணைய மறுக்கிறார்: டிடிவி தினகரன்

'திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போது ஓபிஎஸ் தயாராக இருந்த போதிலும் ஈபிஎஸ் இணைய மறுக்கிறார். அதிமுக பிரிவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் தயாராக இருந்த போதிலும் ஈபிஎஸ் இணைய மறுக்கிறார்

author img

By

Published : Feb 3, 2023, 6:54 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2021 தேர்தலிலேயே ஒன்றிணைந்திருக்க வேண்டும். 2021-ல் திமுகவை தோற்கடிக்க கூட்டணிக்கு தயாராக இருந்தேன். திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை அறிவித்தால் நாங்களும் யோசிப்போம். நாங்கள் அகங்காரத்தில் பேசுவது இல்லை, எதார்த்தவாதிகள். இடைத்தேர்தல் குறித்து அவசரப்பட்டு நாங்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை. திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றிணைந்தால் வரவேற்போம். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவை நம்புவார்கள் என நம்புகிறேன்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பது குறித்து யோசிப்போம். கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியமளித்து திமுக வேறு இடத்தில் நினைவுச் சின்னம் வைக்கலாம். அதற்கான செலவை திமுகவின் கட்சி நிதியிலிருந்தே செலவு செய்து கொள்ள வேண்டும். அதிமுக பிரிவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். ஓபிஎஸ் தயாராக இருந்த போதிலும் ஈபிஎஸ் இணைய மறுக்கிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: Erode East by Election 2023:வேட்புமனு தாக்கல் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.