சென்னை: அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியவர், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை நடத்தி முடிப்போம்.
என்னுடைய வாழ்த்துகளை திராவிடப் பள்ளிக்கு சொல்லிவிடு என அவர் கூறினார். நானும் திராவிடப்பள்ளியில் படித்து உங்களிடம் சான்றிதழ் பெற வேண்டும் என ஆசையாக உள்ளது.தேர்வெல்லாம் வைக்கிறார்கள். நான் கண்டிப்பாக பாஸ் ஆகி விடுவேன். நானும் அதற்கான முயற்சியில் இறங்குகிறேன். மாணவனாகவே இங்கு வந்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனும், நானும் சட்டமன்றத்தில் ஒன்றாக தான் அமர்ந்து இருப்போம். அதுவும் பள்ளி மாதிரித்தான் இருக்கும் என்றார்.
பெரியார் உணவகத்தை திறந்து வைக்கும் சுபவீக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா உணவகத்தை பெரியார் உணவகமாக மாற்ற வேண்டும் என அண்ணன் கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். அது அம்மா உணவகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாம் தனியாக பெரியார் உணவகம் தொடங்கி இலவசமாகவே சாப்பாடு போடலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொதுமக்கள் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை