ETV Bharat / state

லட்சங்கள் புழங்கும் புழல் சிறை..!:வாரி இறைக்கும் சிறைவாசிகளுக்கு சொகுசு வாழ்க்கை - புழல் சிறையில் லஞ்சம்

சென்னை புழல் சிறையில் லட்சங்கள் புழங்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லட்சங்கள் புழங்கும் புழல் சிறை..!:வாரி இறைக்கும் சிறைவாசிகளுக்கு சொகுசு வாழ்க்கை

author img

By

Published : Feb 5, 2022, 12:12 PM IST

Updated : Feb 5, 2022, 1:52 PM IST

சென்னை: ஆசியாவிலேயே 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மிகப்பெரிய சிறைச்சாலை சென்னையில் உள்ள புழல் சிறை. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண் கைதிகள் என தனித்தனியாக 3 சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 3000க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை அடைத்து வைக்க இட வசதி உள்ளது. சிறையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் சிறைக் காவலர்கள் என பெருங்கடல்-ஐ போல் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இவ்வளவு பாதுகாப்பு வளையத்தில் சிறைவாசிகள் இருப்பதால் கடும் தண்டனை அனுபவித்து வருவதாகப் பொதுமக்கள் எண்ணினால் அது தவறு என்பதை பல சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. சிறையில் அலுவலர்கள் சிலர் பணம் பெற்றுக்கொண்டு சிறைவாசிகளுக்கு செல்போன், கஞ்சா, மது, ஆடம்பர உணவு என சொகுசு வாழ்க்கை அளித்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் வைத்திருந்ததாக சேகர் ரெட்டியை சிபிஐ கைது செய்து புழல் சிறையில் அடைத்த போது, வீட்டிலிருந்து உணவு, டிவி,செல்போன் என சொகுசு வாழ்க்கை வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் குற்றவாளிகள் புழல் சிறையில் இருந்தபோது செல்போன், உயர்தர உணவு, டிவி பார்ப்பது போன்ற புகைப்படங்கள் பரவின, இதே போல முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி

இந்நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ’பப்ஜி’ மதனுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுக்க அவரது மனைவி கிருத்திகாவிடம் உதவி ஜெயிலர் செல்வம் ரூ.3லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பரவி வரும் பப்ஜி மதன் மனைவியின் வைரல் ஆடியோ

பொதுவாக சிறைவாசிகளை மூன்று வகைகளாகப் பிரித்து சிறையில் அடைக்கப்படுவர். அதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஏ கேட்டகரியிலும் அடுத்தப்படியாக தரத்தை பிரித்து அடைப்பது உண்டு. ஏ கேட்டகரி சிறைவாசிக்கு கட்டில், மேஜை, மின்விசிறி வழங்கப்படுவதும், பண்டிகை நாட்களில் ஷூ அணிவதும், தனியாக உணவு சமைத்து கொள்ளும் வசதிகள் இருக்கும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் ஒருபுறம் சிறை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பணத்திற்கேற்ப அனைத்து கேட்டகரி சிறைவாசிகளுக்கும் சகல வசதிகளும் செய்து கொடுத்து வருகின்றனர். பணம் கொடுத்தால் கஞ்சா, உயர்தர உணவு, செல்போன், டிவி,பெட் என அனைத்தும் உட்கார்ந்த இடத்தில் கிடைப்பதாக சிறைவாசம் அனுபவித்த கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறையில் உணவு பிடிக்காத சிறைவாசிகள், அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் தனியாக அசைவ உணவு சமைத்து வழங்கும் வசதியும் சிறையில் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பணம் இருந்தால் சிறையிலும் பல வசதி

ஒரு நாளைக்கு ரூ.1000 என்ற கணக்கில், சிறைவாசிகள் எத்தனை நாள்கள் சிறையில் இருக்கின்றார் என்பதை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல தான் பப்ஜி மதனுக்கு உணவு வழங்க பப்ஜி மதனின் மனைவியிடம் அலுவலர்கள் லஞ்சம் கேட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழிப்பறியில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் நபர்கள் சிறையில் பெரிய கொள்ளையில் ஈடுபடக் கற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். பல ரவுடிகள் சிறையில் இருந்துக்கொண்டே ஸ்கெட்ச் போட்டு கொலை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறைத்துறை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், “சிறையில் அலுவலர்களுக்கு பணம் கொடுத்தால் 2 பேர் தங்கக்கூடிய அறை. இல்லையென்றால் 10*10 அறையில் 8 பேர் தங்க வைக்கப்படுவார்கள். லாட்டரி அதிபர் மார்டின் சிறையில் அடைக்கப்பட்ட போது சொகுசு வசதி செய்துதர 1கோடி ரூபாய் வரை லஞ்ச பெற்று கொண்டு சிறை டி.ஐ.ஜி ஒருவர் வீடு வாங்கிவிட்டார்.

கரோனா தனிமைபடுத்தலுக்காக கிளை சிறையில் அடைக்கும் போதே சிறைவாசிகளின் உறவினர்களிடம் லஞ்சமாக பெற்று கொள்கின்றனர். காசு இருந்தால் எல்லா வசதிகளும் செய்து தர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புழல், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட சிறைகளில் லஞ்சம் அதிகளவில் புழங்குவதாகக் கூறினார். லஞ்சம் வாங்கிக் கொண்டு அனைத்து சேவையையும் செய்யக்கூடிய அலுவலர்கள் இருக்கும் வரை குற்றங்கள் குறையாது” என்றார்.

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜர் சிலை இன்று திறப்பு!

Last Updated : Feb 5, 2022, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.