ETV Bharat / state

'பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளிக்கும் திமுக' -அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி, மக்களின் கொள்கைகளை நம்பாமல் பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 3, 2019, 3:57 PM IST

அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை கிண்டியில் இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியினர் மக்களின் கொள்கைகளை நம்பாமல் பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்கிறது.

கோடநாடு விவகாரத்தில் தனி நபரை விமர்சனம் செய்யக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி ஆவணங்கள் கிடைத்துள்ளது. இதை விட வேறு என்ன ஆவணம் வேண்டும். நான்கு தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் களத்தில் இறங்க தயாராக உள்ளோம்' என அவர் கூறினார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.04.19

கிண்டியில் இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட ஜெயக்குமார் பேட்டியளிக்கையில், 

சுதந்திரமன நியாயமான நேர்னையான தேர்தல் நடத்த கோரியுள்ளோம். பணத்தின் மீது நம்பிக்கையில்லை. தலைவர் மீதுதான் நம்பிக்கை. திமுக தலைமையிலான கூட்டணியினர் மக்களை கொள்கைகளை நம்பாமல், பணத்தை வெள்ளம் போல் அள்ளித்தெளித்து வெற்றி பெற முயல்கிறது. தொகுதிக்கு 100 கோடி செலவழித்து வெற்றி பெற விஞ்ஞான பூர்வமாக செயல்படுகின்றனர். ஜனநாயக விரோதமாக திமுக செயல்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் எங்கு யாரால் எடுக்கப்பட்டது. எந்த வழியில் வந்தது என ஆய்வு செய்யவும், சம்மந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் கோரியுள்ளோம். கொடநாடு பற்றி தனி நபர் விமர்சனங்கள் செய்ய கூடாது என நீதிமன்றம் சொல்லியும் திமுக தலைவர் உள்ளிட்டோர் பேசிவருகின்றனர். மேலும், பல்வேறு கோரிக்கை வைத்துள்ளோம். விசாரணையில் உண்மை வெளியில் வராமல் போகாது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது துரைமுருகனுக்கு சொந்தமான இடம் அங்கு கல்லூரி ஆவணங்கள் இருந்துள்ளது. இதனை விட வேறு என்ன ஆவணம் வேண்டும்..? பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் எனவும் ஆணையத்திடம் கூறியுள்ளோம். நான்கு சட்டமன்ற தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் தயார் என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.