ETV Bharat / state

"விஜயை அரெஸ்ட் பண்ணுங்க" - டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பெண் - dgp office

நடிகர் விஜயை கைது செய்ய வேண்டும் என அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

all peoples party leader
புகை பிடிப்பதை நடிகர் விஜய் ஊக்குவிக்கிறார்
author img

By

Published : Jul 6, 2023, 7:19 PM IST

Updated : Jul 6, 2023, 7:44 PM IST

விஜயை அரெஸ்ட் பண்ணுங்க

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்‌ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் கொண்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். தற்போது லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையானது. இளைஞர்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விஜய் நடித்திருப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் தூண்டுதலின் பேரில் சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாகப் பேசி, மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பாக தான் போராட்டங்களை முன்வைத்ததால் படக்குழு பாடலில் புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் என்ற வாசகத்தைப் பதிவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசி மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் ஐடியை டேக் செய்த படியே அனைவரும் தன்னை ஆபாசமாகப் பேசி மிரட்டுவதாக கூறினார். மேலும்,நடிகர் விஜயின் தூண்டுதலின் பேரில் தன்னை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். இதனால் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பேச தூண்டிவிடும் நடிகர் விஜயை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நடிகர் விஜயை மட்டுமே குறிவைத்து புகார் கொடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய போது, ஆடை பட போஸ்டருக்கு எதிராகப் புகார் கொடுத்து, அதைத் தடுத்ததும் நான் தான், ரஜினிகாந்திற்கு எதிராகவும் புகார் கொடுத்ததும் நான் தான் எனக் கூறினார். எனது வரலாறு தெரியுமா? என செய்தியாளர்களிடம் கூறினார்.

நடிகர் விஜய்க்கு சிறு வயது ரசிகர்கள் அதிகம் என்பதாலும், உலக சுகாதார மையத்தில் 53% பேர் புகைப்பிடிப்பதற்கு காரணம் நடிகர்கள் மட்டுமே எனக் கூறுவதாலும் அதைத் தடுக்க புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க:கோவை மற்றும் நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Last Updated : Jul 6, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.