ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை - தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

state election commission
state election commission
author img

By

Published : Nov 27, 2019, 4:45 PM IST

Updated : Nov 27, 2019, 5:45 PM IST

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.

இதன் பின்னர் உள்ளாட்சிப் பணிகளை செயல்படுத்திட சிறப்பு அலுவலர்கள் அந்தஸ்த்தில் பஞ்சாயத்து, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு நியமியமிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தலைமையில் அவை தொடர்பான பணிகள் முடக்கிவிடப்பட்டது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல் தேதியினை தமிழ்நாடு அரசு அறிவிக்க ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால், மாநில தேர்தல் ஆணையர் தலைமையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலேசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: "சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 1912-13ல் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது" - ஓபிஎஸ்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 27.11.19

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நாளை ஆலோசனை கூட்டம்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சிப் பணிகள் தேக்கமடைவதாக பொதுமக்கள் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. பின்னர் உள்ளாட்சிப் பணிகளை செயல்படுத்திட சிறப்பு அதிகாரிகள் அந்தஸ்து பஞ்சாயத்து, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு நியமியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை முறயாக நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்து. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 12 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தமிழக அரசின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பாதகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 2 ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை அறிவிக்கவும் உள்ளதாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையர் தலைமையில் அவை தொடர்பான பணிகள் முடிக்கிவிடப்பட்டது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தேதியினை தமிழக அரசு அறிவிக்க ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால், நாளை மாநில தேர்தல் ஆணையர் தலைமையில்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையில், இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது...

tn_che_03_all_party_meeting_announcement_script_7204894Conclusion:
Last Updated : Nov 27, 2019, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.