10 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட மொத்தம் 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால், அமமுகவிற்கும் மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. இது அக்கட்சியினரிடயே பெரும் அதிருப்திய ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக அமைச்சர்கள், திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.