ETV Bharat / state

நீட்டுக்கு எதிரான தீர்மானம்: பாஜக தவிர ஏனைய கட்சிகள் ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாரதிய ஜனதா தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஆதரவு

author img

By

Published : Jan 8, 2022, 6:40 PM IST

நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளரிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசியதாவது:

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை

பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் முதலமைச்சரின் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். இவ்வளவு தற்கொலைகள் இந்தத் தேர்வு நடைபெற்ற பிறகும் ஏன் பாஜக இதனை ஆதரிக்கிறது. இனியும் வேடிக்கைப் பார்க்காமல் மக்கள் நலனுக்காக இதை நிறைவேற்ற வேண்டும்.

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி

குறிப்பாக தமிழ்நாட்டில் நீட் கூடாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மதிப்பெண் போதுமானது. எந்தக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு கூடாது. மத்திய அரசு இந்த நுழைவுத் தேர்வை ரத்துசெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசந்திரன்

நீட் மட்டுமல்ல எந்த உயர் கல்விக்கும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நோக்கில் உள்ளது நீட் தேர்வு. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நீட்டை திணித்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகச் சக்திகளை ஒன்றுதிரட்டி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.

விசிக சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன்

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் விசிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருப்போம் எனத் தீர்மானித்துளோம். ஒரு இடைக்கால ஏற்பாடாக நீட் பயிற்சி மையங்களின் கட்டண கொள்ளையைத் தடுக்க அவசர சட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு இணையாக தமிழ்நாட்டில் நீட்டுக்கு எதிரான இயக்கங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மருத்துவக் கொள்ளை தற்போதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கல்விக் கொள்ளையைத் தடுத்திருக்கிறோம் எனச் சொல்வது கேலிக்கூத்தானது. நீட் தேர்வை ஒரு காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி

நீட் தேர்வு தேவையற்ற ஒன்று. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்ததுதான் நீட் தேர்வு. எதிர்காலத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவதா மக்களின் ஜனநாயக உரிமை போராட்டத்தை முன்னெடுப்பதா என முதலமைச்சர் முடிவு செய்வார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலமைச்சரின் முடிவுக்குத் துணை நிற்கும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.