ETV Bharat / state

நீங்கள் எல்லோரும் போலீஸ் தான் - கூடுதல் கமிஷனர் பேச்சு

சென்னை: பழுதடைந்து காணப்பட்ட போரூர் அரசு தொடக்கப்பள்ளியை காவல்துறையினர் தத்தெடுத்து, தன்னார்வலர்கள் உதவியோடு மறுசீரமைத்தனர். அதன் தொடக்கவிழாவில் நீங்கள் எல்லோரும் போலீஸ் தான் என காவல்துறை கூடுதல் கமிஷனர் மாணவர்களிடையே பேசினார் .

dஅஃப்
dஅஃப்
author img

By

Published : Feb 25, 2020, 11:01 PM IST

சென்னை,போரூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக இல்லாமல் பழுதடைந்து காணப்பட்டது. இதனை சீரமைத்துத் தரவேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் கோரி வந்தனர். ஆனால் யாரும் அதனை சரி செய்து கொடுக்க முன் வரவில்லை.

அதனை அறிந்த போரூர் காவல்துறையினர் அந்த பள்ளியை தத்தெடுத்து தன்னார்வலர்கள் உதவியோடு சிதிலமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவர், மின் விளக்குகள், 13 வகுப்பறைகளுக்கு வட்ட வடிவ மேஜைகள், நூறு நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்கள், சுவர் முழுவதும் வண்ணம் தீட்டி ஓவியங்கள் வரைந்து பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தி தனியார் பள்ளி போல் சீரமைத்து வழங்கி உள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளியின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் காவல்துறை கூடுதல் கமிஷனர் தினகரன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார்.

மறுசீரமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி

அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், காவலர்கள் உங்கள் நண்பன். சாலை விதிமுறைகளை உங்களது பெற்றோர்களிடம் எடுத்து கூறுங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் எல்லோரும் போலீஸ் தான், நான் உத்தரவு கொடுத்து விட்டேன், அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

விழாவில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழுதடைந்த பள்ளியை சீரமைத்து கொடுத்த போலீசாருக்கு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்தனர். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நோட்டு புத்தகங்கள் முதலியன வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க கோரிய வழக்கு: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.