ETV Bharat / state

அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைய வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி - ராகுலின் யாத்திரை பாஜக கட்சிக்கு அதிர்ச்சி தரும்

அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைய வேண்டும் என்பது எங்களது விருப்பம் என திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைய வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி

author img

By

Published : Sep 7, 2022, 8:27 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்.பிக்கள், 30 மாவட்டச்செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருக்கின்றனர். அதிமுகவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை பழனிசாமி வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன்.

உண்மையான திராவிட இயக்கம், திமுக தான். அதிமுகவில் இருந்து பலபேர் எங்களுடன் வந்துள்ளனர். இதனை யாரும் மறுக்க முடியாது. எனவே, அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைய வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

ராகுலின் யாத்திரை என்பது பாஜகவினருக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 37 விழுக்காடு வாக்குகள் வாங்கிதான் மோடி பிரதமரானார். அதாவது 63 விழுக்காடு வாக்குகள் மோடிக்கு எதிராக விழுந்துள்ளன. இத்தகைய 63 விழுக்காடு வாக்குகளையும் ஒன்றாகத் திரட்டும் பணியில் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளனர்.

இந்த யாத்திரை என்பது 2024இல் மிகப்பெரிய மாற்றத்தை மத்தியில் உருவாக்கும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பங்கு நிச்சயமாக பெரியளவில் இருக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.