சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம் அமைக்கப்பட்டது. அதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதைப்பற்றிய குறும்படம் இம்முகாமில் காண்பிக்கப்பட்டது. அனைவரும் அதனைப் பின்பற்ற வேண்டும்.
கரோனா விழிப்புணர்வு முகாமை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கியதற்கு முக்கிய காரணம் பல்வேறு மாநில பயணிகள் இங்கு வருகை தருவார்கள் என்பதால்தான். மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால்தான் கரோனா வைரஸ் பரவலை தடுக்கமுடியும்", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் - ஹிட்மேன்