அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற முறையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அதன் மாநிலச் செயலாளர் தினேஷ் தெரிவித்தார்.
பின்னர் ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.