சென்னையில் இருந்து 183 பயணிகளுடன் இண்டிகோ விமானம் உதய்ப்பூருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
பின்பு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் உதய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.