ETV Bharat / state

'லுக் அவுட்' நோட்டீஸ் திரும்பப் பெற்றால், வெளிநாடு செல்வார்! - சிவசங்கரன்

சென்னை: ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் மோசடி செய்த ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் மீதான "லுக் அவுட்" நோட்டீஸை திரும்பப் பெற்றால் வெளிநாடு தப்பித்து செல்வார் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

chennai HC
author img

By

Published : Aug 20, 2019, 3:29 AM IST

வங்கியில் 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் சிவசங்கரன், தனது வெளிநாட்டு பயண தேதி மற்றும் திட்டத்தை தெரிவிக்க இருப்பதால் தன் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸை திரும்ப பெறக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம், சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ துணை கண்கானிப்பாளர் ரவீந்தர பட்கல் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மனுதாரர் பின்லாந்து நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் ஐடிபிஐ வங்கி அலுவலர்களுடன் இணைந்து 523 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வங்கி மோசடி வழக்கில் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மனுதாரர், சிவா குழுமம், ஐடிபிஐ வங்கி அலுவலர்களுடன் ஈ-மெயில் பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

சிவசங்கரன் மற்றும் 37 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை மூன்று முறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் மனுதாரர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு தேவை என்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:Body:ஐ.டி.பி.ஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் மோசடி செய்த ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் மீதான "லுக் அவுட்" நோட்டீஸை திரும்ப பெற்றால் வெளிநாடு தப்பித்து செல்வார் என சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வங்கியில் 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் சிவசங்கரன், தனது வெளிநாட்டு பயண தேதி மற்றும் திட்டத்தை தெரிவிக்க இருப்பதால் தன் மீதான லுக் அவுட் நோட்டீஸை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கடந்த 9 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ துணை கண்கானிப்பாளர் ரவீந்தர பட்கல் தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரர் பின்லாந்து நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளுடன் இணைந்து 523 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் தப்பி செல்ல வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வங்கி மோசடி வழக்கில் 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மனுதாரர், சிவா குழுமம் மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளுடன் ஈ-மெயில் பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

சிவசங்கரன் மற்றும் 37 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை 3 முறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் மனுதாரர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு தேவை என்பதால் வெளி நாடு செல்ல அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.