ETV Bharat / state

காற்றின் தன்மை குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்! - காற்றின் மாசு மோசமாக உள்ளது

சென்னை: பள்ளிகள் இருக்கும் இடத்தில் காற்றின் மாசு மோசமாக உள்ளது என காற்றின் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்த பத்தாம் வகுப்பு மாணவர் அதுல் மத்தேயு கண்டுபிடித்துள்ளார்.

air pollution study chennai
author img

By

Published : Oct 29, 2019, 8:10 AM IST

Updated : Oct 29, 2019, 4:48 PM IST

பெருநகரங்களுக்கு காற்றின் மாசை சமாளிப்பது மிகவும் சவலான ஒன்று. இதற்கு பல வழிமுறைகளை பின்பற்றினாலும் காற்றின் மாசு குறையவில்லை. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர் அதுல் மத்தேயு என்பவர், "Toxi City A study on air pollution in Chennai city" என்ற தலைப்பில் சென்னை பள்ளிகள் இருக்கும் இடத்தில் காற்றின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ச்சி செய்துள்ளார். அந்த ஆராய்ச்சியின் மூலம் மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னையில் மயிலாப்பூர், கண்ணம்மாபேட்டை, திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவான்மியூர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் இருக்கும் இடத்தில் காற்றின் மாசு மிகவும் மோசமாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இதைப் பற்றி மாணவர் அதுல் மத்தேயு பேசுகையில், ‘சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 281 பள்ளிகளில் ரேண்டமாக 13 பள்ளிகள் தேர்வு செய்து அரைமணி நேரம் காற்றின் தன்மையை ஆராய்ச்சி செய்தேன். சில சமயங்களில் பள்ளிகள் முன் காற்றின் தன்மையை ஆராய அனுமதிக்கவில்லை. அது ஒரு சவலாக இருந்தது. பிறகு இது குறித்து விரிவாக படித்து ஆராய்ச்சி செய்ததில் பல பள்ளிகள் காற்று மாசுபட்ட பகுதியில் உள்ளது தெரியவந்தது’ என்றார்.

மேலும், இந்த ஆராய்ச்சி தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிரில் அலெக்சாண்டர் பேசுகையில், தற்போது காற்றில் மாசு கலந்துகொண்டிருப்பது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உலகச் சுகாதார அமைப்பின்படி காற்றில் கலந்துள்ள மாசின் நுண் துகள்கள் பத்துதான் இருக்க வேண்டும். அதே இந்தியன் ஸ்டாண்டர்ட் படி 35 நுண்துகள்கள் வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள் இருக்கும் இடத்தில் காற்றின் மாசு மோசமாக உள்ளது

ஆனால் சென்னையில் பள்ளிகள் இருக்கும் இடத்தில் குறைந்தபட்சம் காற்றின் மாசில் 91 நுண் துகள்கள் உள்ளது. அதேபோல் அதிகபட்சம் 230-க்கும் அதிகமாக நுண் துகள்கள் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே அரசு உடனடியாக காற்றின் மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் கோலாகலம்!

Intro:

Body:Visuals

Conclusion:
Last Updated : Oct 29, 2019, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.