ETV Bharat / state

விதிமுறைகளை மீறினால் பொறியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்

சென்னை: பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்று தர மறுத்தால், அந்நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

chennai
author img

By

Published : Apr 2, 2019, 9:34 AM IST

பொறியியில், தொழில்நுட்பகல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்களின் உண்மைச் சான்றிதழ்களை அந்நிறுவனங்கள் பெற்று தர மறுத்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் செயலாளர் அலோக் பிரகாஷ் மிட்டல் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 'அகில இந்திய தொழில்நுட்பகல்வி கழகத்திற்கு பணியை ராஜினாமா செய்தவர்கள், பணியிலிருந்து சென்றவர்களின் உண்மையான கல்வித் தகுதி சான்றிதழ்களை அகில இந்திய கல்விக்கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

விதிகளின்படி இதுபோன்று வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. ஏதாவது விதிமீறல்கள் நடைபெற்றால் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு பருவத்தேர்வுக்கு உரிய பாடங்கள் நடைபெற்றுவரும் பொழுது விரிவுரையாளர்கள், பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதம் முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

அலோக் பிரகாஷ் மிட்டல்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழம்

அதேபோல் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் உண்மைச்சான்றிதழ்களை கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக நிறுத்தி வைத்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாகவும் கொள்கைக்கு முரண்பாடாகவும் செயல்படுகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:விதிமுறைகளை மீறினால்
பொறியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து

Body:சென்னை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் உண்மை சான்றிதழ்களை பெற்று வைத்திருந்தாள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் உறுப்பினர் செயலாளர் அலோக் பிரகாஷ் மிட்டல் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு பணியை ராஜினாமா செய்தவர்கள், பணியிலிருந்து சென்றவர்களின் உண்மையான கல்வித் தகுதி சான்றிதழ்களை அகில இந்திய கல்விக்கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
விதிகளின்படி இதுபோன்று வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. ஏதாவது விதிமீறல்கள் நடைபெற்றால் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு பருவத்தேர்வுக்கு உரிய பாடங்கள் நடைபெற்று வரும் பொழுது விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதம் முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
அதேபோல் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் உண்மை சான்றிதழ்களை கட்டணம் செலுத்த வில்லை என்பதற்காக நிறுத்தி வைத்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது போன்ற செயல்கள் முழுமையான விதிமுறைகள் ஆகும். இதுபோன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாகவும் கொள்கைக்கு முரண்பாடாகவும் செயல்படுகின்றன அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.