ETV Bharat / state

'ஒலிம்பியாட் போட்டிக்குப்பிறகு இந்தியாவில் புதிய செஸ் சகாப்தம் தொடங்க உள்ளது' - சஞ்சய் கபூர்

இந்த ஒலிம்பியாட் போட்டிக்குப்பிறகு இந்தியாவில் புதிய செஸ் சகாப்தம் தொடங்கவுள்ளதாக அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் கபூர்
சஞ்சய் கபூர்
author img

By

Published : Jul 28, 2022, 4:01 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 29) தொடங்கப்படவுள்ள நிலையில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்காடி ஜோகோவிச், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். முதலாவதாக பேசிய சரவ்தேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச், “ஒலிம்பியாட் வரலாற்றில் அதிக நாடுகள் அதிக அணிகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக உள்ளது.

இந்த ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உறுதி மொழியாக செஸ் FOR WOMEN என்ற உறுதிமொழிக்கு ஏற்ப அதிக நாடுகள் இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பேசினார்.

தொடர்ந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், “தமிழ்நாட்டில் தற்போது மிகவும் சிறந்த முறையில் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தியா முழுவதிலும் ஒருங்கிணைந்தே இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து பணிகளை இரவு பகல் பாராமல் செய்து முடித்து உள்ளோம்.

இந்த ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு இந்தியாவில் புதிய செஸ் சகாப்தம் தொடங்கப் போகிறது. மேலும் 8 மாத கர்ப்பிணியாக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை ஹரிக்காவை நினைத்து பெருமை கொள்கிறோம் ,ஹரிகாவின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்” என்றார்.

அவரைத் தொடந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளர் பரத் சிங், “இந்தியாவில் தமிழ்நாடு சதுரங்க கலாச்சாரம் கொண்ட மாநிலம், மேலும் பல கிரான் மாஸ்டர்கள் உள்ளனர், இதனால் தான் ஒலிம்பியாட் போட்டிகளை இங்கு நடத்துவதற்கான திட்டமிட்டோம்” என தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஶ்ரீநாத் நாராயணன், “இந்திய அணி சிறந்த பயிற்சியின் மூலம், தயாராக உள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. இதுபோன்ற போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது மூலம், செஸ் விளையாட்டில் பலர் ஆர்வம் கொண்டு, விளையாட முன்வருவார்கள்.

அமெரிக்க அணி தான் மிகவும் வலுவான மற்றும் முதல் நிலையில் உள்ள அணியாக பார்க்கப்படுகிறது. நாங்கள் முதல் நிலைக்கு வர முயற்சி செய்து இந்தியாவுக்கு பதக்கங்கள் வெல்ல காத்து கொண்டிருக்கிறோம். செஸ் விளையாட்டை ஏறாலமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தற்போது விளையாட ஆரம்பித்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: 44th Chess Olympaid: வயிற்றில் 8 மாத குழந்தை...களம் இறங்கும் இந்திய வீராங்கனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.