ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பாக அதிமுக அறிக்கை - chennai latest news

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடவுள்ள உறுப்பினர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

aiadmk-petition-for-local-elections
aiadmk-petition-for-local-elections
author img

By

Published : Sep 14, 2021, 9:42 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உறுப்பினர்கள் விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,”தமிழ்நாட்டில் 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோருபவர்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டணத் தொகை 5 ஆயிரம் ரூபாயாகவும்,ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தில் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உறுப்பினர்கள் அதற்கான அசல் ரசீது, நகலினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலர்கங்களில் சமர்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்களும் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை கழக உறுப்பினர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

அதேபோல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைகள் பின்பற்றப்பட்டும்,தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டும்,முகக்கவசம் அணிந்தும் தற்காப்பு நடவடிக்கைகள் பின்பற்றியும் விருப்ப மனுக்களை பெற வேண்டும்”என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.