ETV Bharat / state

ஆளும் கட்சியினர் மிரட்டும் தொனியில் பேசி எங்களை பேசவிடுவதில்லை - அதிமுக உறுப்பினர்கள்!

திமுக ஆளும் கட்சியினர் அதிகார தொனியில், ’துதி’ புகழ் பாடுவதையே மாமன்றத்தில் வேலையாக வைத்திருக்கிறார்கள் என அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

author img

By

Published : May 31, 2022, 3:28 PM IST

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் நேற்று (மே.30) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய 145ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்குக் கழிவறை இல்லை, பல அம்மா உணவகங்கள் தற்போது முறையாக செயல்படுத்தப்படவில்லை, மூடப்பட்ட அம்மா உணவகங்கள் எவ்வளவு என கேள்வி எழுப்பினர்.

அப்போது, அம்மா உணவகம் அமைக்கப்பட்டபோது இருந்தே கழிவறை இல்லை என திமுக உறுப்பினர்கள் தெரிவிக்க, அதிமுக உறுப்பினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின், அம்மா உணவகப் பணியாளர்களுக்குக் கழிவறை அமைப்பது தொடர்பாக வசதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா பதில் அளித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

இதனையடுத்து, மாமன்ற கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக 145ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், "அம்மா (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா) ஆட்சியில் 200 அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுத்தினார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அம்மா உணவகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தினார்.

அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன்
அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன்

கரோனா காலகட்டத்தில் அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பெரிதும் நன்மை அளித்துள்ளது. தற்போது அம்மா உணவகம் சீராக செயல்படுவதில்லை. அம்மா உணவகம் குறித்து மாமன்றத்தில் பேசினால், திமுக மாமன்ற உறுப்பினர்கள் எங்களைக் கேலி செய்து, எங்களை பேச அனுமதிக்க மறுக்கின்றனர்.

அதிமுகவில் 15 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் மாமன்றக்கூட்டத்தில் எங்களுக்கு நேரம் தராமல் பேச வாய்ப்பளிக்கவில்லை. ஆளும் கட்சியினர் மிரட்டும் தொனியில் பேசி, எங்களை பேசவிடுவதில்லை. ஆளும்கட்சி துதி பாடி துதி புகழ்பாடும் செயல்களையே மாமன்றக் கூட்டத்தில் செய்கின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி குறைகளை மட்டுமே கண்டு பெரிதுபடுத்துகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.