ETV Bharat / state

பேரவையில் பதில்கூற வாய்ப்பளிக்காததால் அதிமுக திடீர் வெளிநடப்பு - எஸ்.பி.வேலுமணி ஆதங்கம் - வெளிநடப்பு

சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சி மீதான திமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூற பேரவைத்தலைவர் தங்களுக்கு உரிய வாய்ப்பு தரவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் பதில்கூற வாய்ப்பளிக்காததால் அதிமுக திடீர் வெளிநடப்பு

author img

By

Published : Apr 6, 2023, 10:35 PM IST

Updated : Apr 6, 2023, 10:50 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சி மீதான திமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு , பதில்கூற பேரவைத்தலைவர் தங்களுக்கு உரிய வாய்ப்பு தரவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவிற்கு மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் போதுமான நேரத்தை பேரவைத் தலைவர் வழங்கவில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வெளிநடப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று மாலை அமர்வில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர்கள் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும் தரமான அரிசி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய கொறடா எஸ்.பி. வேலுமணி, அதிமுகவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் அவை குறிப்பிலிருந்து நீக்கும் பேரவைத் தலைவர் , அதிமுக ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக அரசின் திட்டங்கள் குறித்த சாதனைகளை எங்களது உறுப்பினர்கள் பேசினர். பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். விலைவாசி உயர்வு உட்பட நாட்டில் பல பிரச்னைகள் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. மேலும் மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில்தான் எழுப்ப முடியும்.

திமுக தேர்தல் அறிக்கையில் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவதாக கூறியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் குறைவான நாட்களே பேரவையை நடத்துகின்றனர். மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்ய வேண்டும். எந்த குற்றச்சாட்டையும், மக்கள் பிரச்னையையும் பேரவையில் பேச முடியவில்லை. நாங்கள் பேசுவதை உடனே அவைக்குறிப்பில் இருந்து நீக்குகின்றனர்.

எங்கள் ஆட்சியில் பேரவைத் தலைவராக தனபால் இருந்தபோது திமுக உறுப்பினர்களுக்கு நீண்ட நேரம் வாய்ப்பு வழங்கி பேசினர். விலையில்லா அரிசி கொடுத்த ஆட்சி அதிமுக. தரமான அரிசி கொடுத்ததே, இருமுறை அதிமுக ஆட்சி தொடர காரணமாக இருந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை பட்டியில் அடைத்து வைத்தனர்.

பயோ மெட்ரிக் முறையை கொண்டுவந்தது மத்திய அரசு, ஆனால் திமுகவினர் அதிமுகவை குறை சொல்கின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதிமுகவிற்கு மட்டுமல்ல பாஜக , காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என்று வெளிநடப்பிற்குப் பின் கூறினார்.

இதையும் படிங்க: என் மகள் இறப்புக்கு நீட் பயிற்சி மையம் தான் காரணம் - தற்கொலை செய்த மாணவியின் பெற்றோர் புகார்!

Last Updated : Apr 6, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.