ETV Bharat / state

ஈபிஎஸ்-க்கு முக்கியத்துவம் இல்லை: தேர்தல் ஆணைய கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக - சென்னை செய்திகள்

ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்ட தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக

author img

By

Published : Dec 31, 2022, 2:47 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தம் உட்கட்சி விவகாரங்களை கடந்து மற்ற விவகாரங்களிலும் எதிரொலிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று குறிப்பிடப்பட்ட அதிமுகவின் ஆண்டு வருமான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக அங்கீரித்துவிட்டது என பேசப்பட்டது. அதற்கு முன்பாக ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்திற்கும் இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இது அதிமுக வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அரசில் இருந்து வந்த கடிதம் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தில் ஈபிஎஸ்க்கு எதிராக வந்துள்ளது. இதில், அதிமுகவின் தலைமை அலுவலக முகவரி இடம்பெற்றுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பினரிடையே உள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித்தை ஏற்றால் இரட்டை தலைமையை நாம் ஏற்றது போல் ஆகிவிடும் என்பதால் அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுத்துள்ளதாக கூறுப்படுகிறது.

இதையும் படிங்க: ‘நான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை’ - குலாம் நபி ஆசாத் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.