ETV Bharat / state

ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

author img

By

Published : Apr 6, 2023, 11:37 AM IST

அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

admk
அதிமுக

சென்னை: 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் நீதிமன்றம் தடை விதிக்காததால், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்டார்.

பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டபோதும், தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இருந்து வருகின்றன. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை ஈபிஎஸ் தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். அதேநேரம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த அறிவிப்பு ரத்தானது.

இந்த நிலையில், அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், அதிமுகவில் உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முறையாக அறிவிக்கவில்லை - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.