சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுகவை சேர்ந்த மருத்துவர் லட்சுமணனிடம் தோல்வி அடைந்தார்.
சமீபத்தில் வெளியான சசிகலாவின் தொலைபேசி பதிவுகளை கடுமையாக விமர்சித்துவந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 3) அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும்; தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிய மோடி!