ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-2022

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்
author img

By

Published : Aug 14, 2021, 10:08 AM IST

Updated : Aug 14, 2021, 12:47 PM IST

12:01 August 14

வேளாண் பட்ஜெட் உரை நிறைவு

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்துவந்த வேளாண் நிதிநிலை அறிக்கை உரை நிறைவுபெற்றது. இதையடுத்து நிதிநிலை அறிக்கை உரை மீது உறுப்பினர்கள் பேசிவருகின்றனர்.

11:54 August 14

திருச்சி-நாகை பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பு

  • கிராமத்தில் கால்நடை வளர்ப்போர் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
  • மீன் விற்பனை அங்காடி கட்டமைப்பு மேம்படுத்த ஏழு கோடியே ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • திருச்சி-நாகை பகுதியினை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பு

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியில் அரிசி, பயறு வகைகள், வாழை, தென்னை போன்ற விளைபொருள்கள் ஆண்டு முழுவதும் உற்பத்தியாகின்றன. 

இப்பகுதிகளில் உற்பத்தியாகும் விளைபொருள்களை மூலப் பொருள்களாகக் கொண்டு அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய்ப் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகள் காவிரி டெல்டா பகுதிகளில் நிறைய எண்ணிக்கையில் உருவானால் இப்பகுதியில் உள்ள வேளாண் பெருமக்கள் வாழ்வு வளமாகும்.

11:47 August 14

நடப்பாண்டில் 4.6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

  • காவிரி டெல்டா பகுதிகளில் கறுவை நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையினைத் திறப்பதற்கு முன்பே டெல்டா மாவட்ட விவசாயிகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கலந்துபேசி பாசன கால்வாய்கள் அனைத்தும் 65 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் 647 தூருவாரும் பணிகள் காலத்தே மேற்கொள்ளப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது.
  • குறுவை குறுவை சாகுபடி சிறப்பாகத் தொடங்கப்பட்டு நடப்பாண்டில் 4.6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த 35 ஆண்டு டெல்டா வரலாற்றில் இல்லாத சாதனையாகும்.

11:38 August 14

நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்

  • மீன் பதப்படுத்தலுக்கு நாகையில் மையம்
  • கோவையில் தேங்காய் மையம்
  • வாழை - திருச்சி
  • மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் - ஈரோடு (இரண்டு கோடி ரூபாய் நிதியில்)
  • சிறு தானியம் - விருதுநகர்

தொழில் கற்கும் மையம் அமைக்கப்படும். 

  • 25 லட்சம் ரூபாய் நிதியில் தமிழ் வழியில் வேளாண்மை,
  • தமிழ்நாட்டில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி ஜூனூரில் 150 ஏக்கரில் அமைக்கப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் மூன்று கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.
  • மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சியை மேம்படுத்த அதற்கான மையம் சிவகங்கை செட்டிநாட்டில் அமைக்கப்படும்.

11:34 August 14

சிறப்புப் பயிர்களுக்குப் புவிசார் குறியீடு

  • சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருள்களுக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களுக்குமான நவீன விற்பனை மையம் அமைக்கப்படும்.
  • கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி புவிசார் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநில அரசின் நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உணவுப் பதப்படுத்தலுக்கென தனி அமைப்பு

11:30 August 14

முருங்கை ஏற்றுமதி மண்டலம்

  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உலர்களம் 31.2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • வேளாண் ஏற்றுமதி சேவை மையம் கிண்டியில் அமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கட்டுமான வசதிகளை மேம்படுத்த ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.

11:27 August 14

கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம்

  • சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் சோதனை முறையில் முதற்கட்டமாக 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 விழுக்காடு மானியம் அல்லது இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
  • நாமக்கல் கொல்லிமலை மிளகு பதப்படுத்துதல் மையத்திற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நீலகிரியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

11:20 August 14

புதிய உழவர் சந்தைகள் அமைத்தல்

உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும். இதற்காக மாநில அரசின் நிதி 12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

  • சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் உழவர் சந்தை கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது.
  • உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 2000 மெட்ரிக் டன் பழங்கள், காய்கறிகள், 8000 விவசாயிகள் மூலம் நான்கு லட்சம் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
  • எனவே 50 உழவர் சந்தைகளில் தற்போதைய நிலையை ஆராய்ந்து அவை புதுப்பொலிவுடன் செயல்பட 12 கோடி ரூபாய் மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கரூர் ஆகிய இடங்களில் 10 சிறிய உழவர் சந்தை ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • வரத்து அதிகம் வரக்கூடிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்தல்
  • ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் 10 கோடி ரூபாய் நிதியில் நவீன குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

11:16 August 14

100 விழுக்காடு மானியத்துடன் 500 பண்ணைகுட்டை

  • 2021-22ஆம் நிதியாண்டில் 7106 வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நீர் சேகரிப்பு கட்டமைப்பை மேம்படுத்த 1700 நீர் கட்டமைப்புகளில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • சூரிய மின் பம்புசெட் அமைக்கும் திட்டத்திற்கு 114 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு லட்சம் ரூபாய் வரை 100 விழுக்காடு மானியத்துடன் 500 பண்ணைகுட்டை அமைக்கப்படும்.

11:13 August 14

ரூ.1 கோடி மதிப்பில் வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா

வடலூரில் புதிய அரசு தோட்டக்கலைப் பூங்கா ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள்:

  • திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய்
  • கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா
  • நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம்
  • தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை, நெல்லி

போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்துச் சேவைகளும் வழங்கப்படும்.

இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசுகளுடன் செயல்படுத்தப்படும்.

11:10 August 14

பண்ருட்டியில் பலாவிற்கு சிறப்பு மையம்

  • 12 வகை காய்கறி அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்,
  • பயிரிடும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்,
  • இடுபொருள் வழங்கி காய்கறி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும். இத்திட்டம் 95 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
  • கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் பலாவிற்கு சிறப்பு மையம் அமைக்கப்படும், இதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

11:00 August 14

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

  • 2016-17 முதல் 2019-20 அரவைப் பருவம் வரை கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,750 வழங்கப்பட்டது.
  • கடந்த நான்கு பருவங்களில் கரும்புக்கு எந்தவித விலை உயர்வும் இல்லாமல் ஒரே விலையைத் தொடர்ந்து வழங்கியதால் கரும்பு சாகுபடிப் பரப்பு கணிசமாக குறைந்துகொண்டே வருகிறது.
  • 2750 லிருந்து 2900 ரூபாயாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்மூலம் ரூ.150 கூடுதலாகப் பெறுவார்கள்.

10:52 August 14

பயிர் காப்பீட்டுத் திட்டம்

  • மாநில அளவில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்
  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குதல்
  • வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும். இதற்காக ஆறு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
  • சென்ற காரீப் 2020 பருவத்திற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 107 கோடியே 54 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்புப் பருவத்திற்கு காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக 304 கோடியே 23 லட்சம் ரூபாய் முதல் தவணையாகக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
  • நடப்பாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரத்து 100 உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்து வேளாண் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய ஒரு குழுவுக்கு ஐந்து லட்சம் வீதம் மூலதன நிதி வழங்கப்படும்

10:49 August 14

தஞ்சையில் தென்னை மதிப்புக்கூட்டு மையம்

  • பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டலம் அமைக்கப்படும்
  • தென்னையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தோட்டக்கலை முறை மூலம் தோட்டக்கலை நடவுப்பொருள்கள் நடப்படும்
  • அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்படுவதன் மூலம் 13 ஆயிரத்து 300 உழவர்கள் பயன்பெறுவார்கள். 59 கோடியே 89 லட்சம் ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
  • தென்னை மதிப்புக்கூட்டு மையம் தஞ்சாவூரில் அமைக்கப்படும்.

10:47 August 14

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்

  • நடப்பாண்டில் 1.7 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதல்செய்யப்படும்
  • திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம்

10:39 August 14

சிறுதானிய இயக்கம்

சிறுதானியங்கள் வளர்க்க ஊக்குவிக்கப்படும்; சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுதானிய இயக்கம் 

  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • கள்ளக்குறிச்சி,
  • வேலூர்,
  • திருப்பத்தூர்,
  • திருவண்ணாமலை,
  • சேலம்,
  • நாமக்கல்,
  • தருமபுரி,
  • கிருஷ்ணகிரி,
  • கோயம்புத்தூர்,
  • திருப்பூர்,
  • மதுரை,
  • தேனி,
  • திண்டுக்கல்,
  • ராமநாதபுரம்,
  • விருதுநகர்,
  • தூத்துக்குடி

போன்ற மாவட்டங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும். மேலும் குறு தானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை ஊக்குவிக்கப்படும்.

சிறுதானிய இயக்கம் 12 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்களுக்கு உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் துவரை, உளுந்து 61 மெட்ரின் டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 45 கோடியே 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

10:37 August 14

குவிண்டால் சன்னரகம் ரூ.2060, சாதாரண ரகம் ரூ.2015

  • ஒரு குவிண்டால் சன்னரகம் ரூ.2060 ஆகவும்,
  • சாதாரண ரகம் ரூ.2015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும்.
  • இதன் வாயிலாக சுமார் ஆறு லட்சம் உழவர்கள் பயனடைவர்.
  • இதனால் அரசுக்கு கூடுதலாக 99 கோடியே 38 லட்சம் செலவு ஆகும்.

10:32 August 14

பனை மேம்பாட்டு இயக்கம்

  • இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர்களாக ஆக்குதல்
  • ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்
  • முதல்கட்டமாக 2500 இளைஞர்களுக்கு பயிற்சி
  • பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்படும்
  • தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 70 லட்சம் பனை விதைகள் ஒரு லட்சம் பனங்கன்று மானியத்தில் வழங்கப்படும்
  • பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் கூட்டுறவுச் சங்கம் ஒருங்கிணைந்து நியாயவிலைக் கடை மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை

10:31 August 14

இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு

வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு தொடங்கப்படும். இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு ஈடுபொருள் மானியம் வழங்கப்படும். 33 கோடியே மூன்று லட்சம் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

10:26 August 14

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

பணப்பயிர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கிராம பஞ்சாயத்து ஒவ்வொரு ஆண்டிலும் ஐந்தில் ஒரு கிராம பஞ்சாயத்தைத் தேர்வுசெய்து ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்திற்காக முப்பத்து ஆறு மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 2500 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்காக கொண்டுவருதல்
  • நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல்
  • சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல்
  • கால்நடைகளின் பால் உற்பத்தியைப் பெருக்குதல்

இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

10:19 August 14

வேளாண் வருவாயை அதிகரித்த ஒருங்கிணைந்த பண்ணையம்

இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கியுள்ள துறைகள்:

  1. கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம்
  2. மானாவாரி நில மேம்பாடு
  3. தரிசு நில மேம்பாடு
  4. இயற்கை வேளாண்மை
  5. மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரித்தல்
  6. சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவித்தல்
  7. ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை அதிகரித்தல்
  8. சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தினை விரிவுபடுத்துதல்
  9. பயிர் விளைச்சலை அதிகரிக்க பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பரவலாக்குதல்
  10. வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தல்
  11. விவசாயிகளை வேளாண் வணிகராக்குதல், இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்குதல்
  12. வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தி விவசாயிகளுக்குப் பகுதி சார்ந்த வேளாண் தகவல் வழங்குதல்

10:15 August 14

நிகர சாகுபடிப் பரப்பு 75% உயர்த்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பயிரிடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

10 லட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அதிகரிக்கப்படும். 

10:12 August 14

வேளாண் புரட்சி

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரை:

உழவர் பெருமக்களுக்கும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை காணிக்கையாக்கி அவை முன்பு படிக்க விழைகிறேன்.

மனித பரிணாம வளர்ச்சியில் மூன்று புரட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாவது, விழிப்புணர்வில் ஏற்பட்ட புரட்சி. இரண்டாவது வேளாண்மை புரட்சி. மூன்றாவது அறிவியல் புரட்சி.

10:09 August 14

273 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துவரும் எம்.ஆர்.கே.

வேளாண் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துவருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். 273 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அவர் தாக்கல் செய்துவருகிறார்.

09:37 August 14

வேளாண் துறைக்கு தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்குத் தாக்கல்செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறார்.

இதில், விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம்செய்வது, பாசன வசதி இல்லாத பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல ஆண்டுகளாக அரசிடம் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அமையும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்துள்ளனர்.

வேளாண் வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு சட்டப்பேரவை கலைவாணர் அரங்கத்தில் கூடியது.

Last Updated : Aug 14, 2021, 12:47 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.