ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் வருமா ? - வேளாண் துறை விளக்கம்

author img

By

Published : May 27, 2020, 3:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என வேளாண் துறை விளக்கம் அறித்துள்ளது.

வேளாண் துறை விளக்கம்
வேளாண் துறை விளக்கம்

பாலைவனப் பகுதிகளை ஒட்டியுள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளிகள் நாள் ஒன்றுக்கு 80,500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது, ஒரு நாளில் 35 ஆயிரம் மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும்.

கென்யா சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் நோக்கி புலம்பெயரும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டும் வரும், ஆனால் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும், இந்தியாவின் மத்திய பகுதியான மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் திசை காரணமாக வந்துள்ளது. எனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. எனினும் இதன் நகர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

ஒருவேளை வெட்டுக்கிளி வந்தால் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி அவற்றைக் கட்டுப்படுத்தலாம்:

1. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர் பாதுகாப்பு மருந்து வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகள் மருந்து பயன்படுத்தலாம்

2. மாலத்தியான் மருந்து, தெளிப்பான்கள், மற்றும் பெரிய டிராக்டர் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்திவிடலாம்.

3. உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலியே என்ற எதிர்
உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

4. வெட்டுக்கிளிகள் சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும்
கட்டுப்படுத்தலாம். அரசு அனுமதியுடன் பூச்சி மருந்து ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா கிராமங்களை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.