சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி செய்தியாளர்களை ஆர்.எஸ்.பாரதி சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிபதிக்கு எதிராக விமர்சனம் செய்ததாகக் கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, யூடியூபர் சவுக்கு சங்கர், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மனு ஒன்றை அளித்தார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கெடுபிடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த மனுவை விசாரித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.பாரதியின் மேல் சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை என்றும், மேலும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல என்றும் கூறி, சவுக்கு சங்கரின் மனுவை தலைமை வழக்கறிஞர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை?... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு!