ETV Bharat / state

நீண்ட இடைவெளிக்கு பிறகு கன்னட நடிகரை வைத்து இயக்கும் சேரன்! - அண்மைச் செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து இயக்குநர் சேரன் படம் இயக்கவுள்ளார்.

Kichcha sudeep
கிச்சா சுதீப்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:58 PM IST

சென்னை: இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். எதார்த்தமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இவர் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இவரது நடிப்பில் தமிழ்க் குடிமகன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இவரது தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பொக்கிஷம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களாகும்.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் சேரன். ஆனால் இந்த முறை கன்னட படத்தை இயக்குகிறார். கன்னட நடிகர் கிச்சா சுதிப் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் அதன் பிறகு அவரது நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படம் வெளியானது. தற்போது தமிழ்க் குடிமகன் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவர் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ள செய்தி திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழில் ஒரு படம் இயக்க முயன்றார். ஆனால் அது நடைபெறாமல் போனது‌. எனவே தற்போது கன்னடத்தில் படம் இயக்க முடிவெடுத்துள்ளார். கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இன்று (செப்டம்பர் 02) நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக விக்ராந்த் ரோனா திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போது சேரன் படத்தில் நடிக்கிறார். இது எந்தமாதிரி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் சந்தான பாரதியின் சகோதரர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.