ETV Bharat / state

ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், ஆப்கானிஸ்தானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து செலுத்துமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

போலியோ
போலியோ
author img

By

Published : Aug 29, 2021, 12:46 PM IST

இந்தியா பத்து ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாகத் திகழ்ந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாடு 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், தெற்கு ஆசியா போலியோ இல்லாத பகுதியாக 2014 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

போலியோ இல்லா தமிழ்நாடு

இருப்பினும் உலகம் முழுவதும் போலியோ பாதிப்பு தொடர்ந்து இருந்தே வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் வழியாக போலியோ நோய் இந்தியாவில் பரவ அதிக வாய்ப்புள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, போலியோ தொற்று நோய் உள்ள நாடுகள், போலியோ மீண்டும் பரவும் நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு அனைத்து இடங்களிலும் போலியோ தடுப்பு மருந்து செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள சூழலில் இந்தியா உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருவது வருபவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து

இந்நிலையில் சுகாதாரத்துறை அலுவலர்களும், விமான நிலையம், துறைமுகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களும் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் பயணிகளின் தினசரி விவரங்களைச் சேகரித்து போலியோ தடுப்பு மருந்து செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்த விவரங்களை தினமும் மாலை 5 மணிக்கு தனக்கு அனுப்புமாறும், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களிடமும் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.