சட்டபேரவையில் இருந்து வெளிநடப்புக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , விக்னேஷின் உடற்கூறு ஆய்வு முடிவில் அவரது உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் , சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நேர்மையாக நடைபெறாது என குறிப்பிட்ட அவர் அரசியல் நோக்குடன் தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்றால் அவர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி , திமுகவின் ஓராண்டு ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க 'உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்' - மதுரை ஆதீனம்