சென்னை: இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் உள்ளிட்ட பிரச்சினைகளில் தீர்வுகாண்பதாகத் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த திமுக தற்போது நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகக் கூறியிருக்கிறது.
மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனத் தெரிவித்தும் ஆட்சி அமைந்த பிறகு அது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்தப் பிரச்சினைகளை திமுக கவனத்துக்கு எடுத்துச் செல்ல வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி முழக்கங்களிட்டு அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு