மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதில், புதிதாக வெற்றி பெற்றுள்ள 13 திமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒன்பது எம்எல்ஏக்கள் நாளை காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர்.
இதை முடித்துக்கொண்டு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.