ETV Bharat / state

'நாங்க இமயமலை, அவங்க பரங்கிமலை' - சீமானை சீண்டும் ஜெயக்குமார் - ntk seeman

பெருவாரியான வாக்குகள் பெற்று அதிமுக இமயமலை போன்று உள்ளது. அதை பரங்கிமலை போன்றவர்கள் கருத்து தெரிவிப்பது 2021 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீமானை விமர்சித்து பேசியுள்ளார்.

dளக
னக
author img

By

Published : Oct 11, 2021, 6:06 PM IST

சென்னை: அதிமுகவின் 50ஆவது ஆண்டு விழா வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.11 ) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதிமுகவின் புதிய அவை தலைவர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதிமுக கூட்டம்
அதிமுக கூட்டம்

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், " அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்ததுள்ளது. இந்த பெருமை எந்த ஒரு கட்சிக்கும் கிடையாது. அதிமுக ஆட்சியில் ஐந்து முதலமைச்சர்கள் இதுவரை ஆண்டுள்ளனர்.

பல சோதனைகள், இன்னல்களை தாண்டி அதிமுக கட்சி வெற்றியோடு இயங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பொன்விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.

சீமானின் கருத்தும், ஜெயக்குமாரின் நகைச்சுவையும்

'உண்மையான எதிர்க்கட்சி, நாம் தமிழர் தான்' என்ற சீமானின் கருத்துக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “1 கோடியே 46 லட்சம் வாக்குகள் பெற்று இமயமலை போன்று உள்ள அதிமுக இயக்கத்தை, பரங்கிமலை போன்றவர்கள் கருத்து தெரிவிப்பது 2021 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக பார்கிறேன்” என்றார்.

ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து குறித்து பேசிய அவர், வியூகங்கள் சார்ந்த தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எந்தக் குழப்பமும் இல்லை, இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அவைத் தலைவர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

சசிகலா குறித்த கேள்வி

சசிகலாவின் மீண்டும் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கேயும் போகமாட்டார்கள். சிறையில் இருந்து வந்தவர்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்கள். நீங்கள் எங்கு வேண்டுமானலும் போகலாம் யாரும் வர மாட்டார்கள்" என்று பேசினார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.