ETV Bharat / state

காவிரி உரிமையை கட்டிக் காத்தது அதிமுக - ஜெயக்குமார் - megadhadhu issue

காவிரி உரிமையை கட்டிக் காத்தது அதிமுக இயக்கம் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
author img

By

Published : Jul 16, 2021, 12:03 PM IST

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று (ஜூலை 16) டெல்லியில் மத்திய ஜல்சக்திதுறை அமைச்சரை சந்தித்துப் பேசுகின்றனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழங்கி வலியுறுத்தவுள்ளனர்.

இதற்காக அமைச்சர் துரைமுருகன், பா.ம.க., பா.ஜ.க., மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 10 கட்சி பிரதிநிதிகள் நேற்று (ஜூலை 15) டெல்லி சென்றனர். அதிமுக சார்பில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளோம்.

'தமிழ்நாடு சரியான பாதை செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது' - ஜெயக்குமார்

விவசாயிகள், மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். காவிரி பிரச்னையில் ஜீவாதார உரிமையை கட்டிக் காத்து முழுமையாக பெற்று தந்தது அதிமுக.

தமிழ்நாடு அரசு சரியான பாதைக்குச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய பிரச்னையிலும் மிகப்பெரிய வெற்றி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் " என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாது, நீட் பிரச்னைகளில் ஒன்றிய அரசு வஞ்சகம் செய்துவருகிறது - வைகோ குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.