சில தினங்களுக்கு முன் அதிமுகவின் ஊராட்சி கழகச் செயலாளர்கள் பதவிகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்தது. இந்த முடிவு அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புடன் மற்றொரு அறிவிப்பையும் அதிமுக வெளியிட்டது.
அதில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி சென்னை மண்டலத்திற்கு அஸ்பயர் சுவாமிநாதனும், வேலூர் மண்டலத்திற்கு கோவை சத்யனுக்கும், கோவை மண்டலத்திற்கு சிங்கை ராமச்சந்திரனும், மதுரை மண்டலத்திற்கு ராஜ் சத்யனும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் இன்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக ஐடி விங் அடிதடி: திமுக குழு உறுப்பினர்கள் கைது