அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான
ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் பின்வரும் மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும்.
சென்னை மண்டலம்:
- வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்
- வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்
- வட சென்னை தெற்கு மாவட்டம்
- தென் சென்னை வடக்கு மாவட்டம்
- தென் சென்னை தெற்கு மாவட்டம்
- காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
- காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்
- காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
வேலூர் மண்டலம்:
- வேலூர் கிழக்கு மாவட்டம்
- வேலூர் மேற்கு மாவட்டம்
- திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
- திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
- கடலூர் கிழக்கு மாவட்டம்
- கடலூர் மத்திய மாவட்டம்
- கடலூர் மேற்கு மாவட்டம்
- விழுப்புரம் வடக்கு மாவட்டம்
- விழுப்புரம் தெற்கு மாவட்டம்
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
- கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
- தருமபுரி மாவட்டம்
கோவை மண்டலம்:
- ஈரோடு மாநகர் மாவட்டம்
- ஈரோடு புறநகர் மாவட்டம்
- திருப்பூர் மாநகர் மாவட்டம்
- திருப்பூர் புறநகர் மாவட்டம்
- கோவை மாநகர் மாவட்டம்
- கோவை புறநகர் மாவட்டம்
- நீலகிரி மாவட்டம்
- திருச்சி மாநகர் மாவட்டம்
- திருச்சி புறநகர் மாவட்டம்
- பெரம்பலூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்டம்
- தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
- தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- தேனி மாவட்டம்
- திண்டுக்கல் மாவட்டம்
மதுரை மண்டலம் சேலம் மாநகர் மாவட்டம்:
- சேலம் புறநகர் மாவட்டம்
- நாமக்கல் மாவட்டம்
- கரூர் மாவட்டம்
- நாகப்பட்டினம் மாவட்டம
- திருவாரூர் மாவட்டம்
- மதுரை மாநகர் மாவட்டம்
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்
- மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்
- விருதுநகர் மாவட்டம்
- சிவகங்கை மாவட்டம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- திருநெல்வேலி மாநகர் மாவட்டம்
- திருநெல்வேலி புறநகர் மாவட்டம்
- தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
- கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
இவைகளின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மண்டலங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள்:
- சென்னை மண்டலம் - அஸ்பயர் K. சுவாமிநாதன், M.B.A., (தியாகராயநகர், தென் சென்னை வடக்கு மாவட்டம்)
- வேலூர் மண்டலம் - M. கோவை சத்யன், PGDM (கழக செய்தித் தொடர்பாளர்)
- கோவை மண்டலம் - சிங்கை G. ராமசந்திரன், B.A., (சிங்காநல்லூர் தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்)
- மதுரை மண்டலம் - V.V.R. ராஜ் சத்யன், B.S., (CIS) (பழைய விளாச்சேரி சாலை, மதுரை)
மேற்காணும் மண்டலங்களுக்கு உள்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும். கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் சம்பந்தப்பட்ட மண்டலச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.