ETV Bharat / state

அதிமுக அரசால் ரூ. 2,577 கோடி இழப்பு -  நிதியமைச்சர் - தமிழ்நாடு அரசு

அதிமுக ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர்
நிதியமைச்சர்
author img

By

Published : Aug 9, 2021, 6:31 PM IST

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஆக.9) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "ஜீரோ வரியில் ஏழைகள் பயனடைவதில்லை, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன. வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 விழுக்காடு ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 விழுக்காடாகத் குறைந்துள்ளது.

மறைமுக கடன்

10 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 விழுக்காடு அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வாங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசால் வாங்கப்பட்ட இந்த கடன் குறித்தான சரியான விளக்கங்கள் இல்லை.

நிதியமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி

மாநில கடன் ரூ.5.70 லட்சம் கோடி

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. நான்கு வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், ஒன்றிய அரசின் வரி பங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே ஆகும். இதில், மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

மதுபான வருவாயை கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வரி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணமும் உயர்த்தப்படாமல் உள்ளது.

ஜீரோ வரி பணக்காரர்களுக்கு சாதகம்

ஜீரோ வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது. கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாத காரணத்தால் ஒன்றிய அரசு மானியத்தை விடுவிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு ரூ.2,577.29 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் பல வருடங்களாக சொத்து வரியை அதிகரிக்கவில்லை. அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது? 3% வரி வரவில்லை என்றால் அது சமூக நீதிக்கு விரோதமான விளைவு.

அரசாங்கத்தின் திறமை

அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது. மாநில அரசிடம் வருமான வரி குறித்த தரவுகள் இல்லை. சமூக நல திட்டங்களுக்கான மானியங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர்ந்ததற்கான தரவுகள் இல்லை. சரியான வரியை சரியான நபர்களிடம் ஈட்டுவது அரசாங்கத்தின் திறமை " என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.