இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் மருத்துவ வசதிகளுக்காகவும், நிவாரண உதவிக்காகவும் அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும். அத்துடன் அதிமுக நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.
கரோனா முதல் அலையின் போது அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய் அரசிடம் வழங்கப்பட்டது. அதிமுகவினர் தங்கள் பகுதிகளில் இன்னல்படும் மக்களுக்கு கொடைக்கரம் நீட்டி நம் கொள்கை வழி நின்று அவர்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கரோனா நிதி வழங்கினார்