ETV Bharat / state

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு - முன்னாள் எம்பி மைத்ரேயன் - நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்பி மைத்ரேயன்
முன்னாள் எம்பி மைத்ரேயன்
author img

By

Published : Jul 11, 2021, 7:42 AM IST

Updated : Jul 11, 2021, 11:08 AM IST

சென்னை: அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான மருத்துவர் மைத்ரேயன், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரிக்கும் என தமிழ்நாடு சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்".

நீட் தேர்வு குழு அமைத்ததை எதிர்த்து மனு

"அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவை கொண்டு வருவதற்கு முன், அது குறித்து கருத்தை அனைத்துத் தரப்பினரிடமும் கேட்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. இராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அக்குழு தனது அறிக்கையை அரசிடம் அளிக்கவுள்ளது".

"இந்த சூழ்நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் நீட் தேர்விலும் விலக்கு பெறும் வண்ணம் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்திருப்பது சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது என்றும், அந்தக் குழுவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்".

பாஜகவின் இரட்டை நிலை

"இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து ஒன்றிய, மாநில அரசுகளின் கருத்தினைக் கேட்டு அறிவிப்பினை அனுப்பியது. நீட் தொடர்பாக குழு அமைக்க அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை எனத் தெரிவித்து ஒன்றிய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜகவின் இரட்டை நிலை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது".

"இந்த தருணத்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசியபோது, “மாநிலங்கள் மேம்படுத்தப்பட்ட நகராட்சிகளாக மாறிவிட்டன (States have been reduced to glorified municipal corporations) என்று சொன்ன வார்த்தைகள் தான் என் நினைவிற்கு வருகின்றன".

உரிமைகளைப் பறிக்கும் செயல்

"நீட் தேர்வு குறித்து ஒரு குழு அமைப்பதற்குக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னை பொறுத்தவரையில், நீட் தேர்வு விலக்கு குறித்து குழு அமைப்பதற்கும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் இயற்றவும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் மனுத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செப்டம்பர் 5ஆம் தேதி நீட் தேர்வு ?

Last Updated : Jul 11, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.