இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"இந்தியத் திருநாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் பிரணாப் முகர்ஜி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைகிறோம்.
மிகச்சிறந்த அரசியல் தலைவர், போற்றுதலுக்குரிய நிர்வாகி, நாடாளுமன்ற நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் தலைவர்களில் ஒருவர் என்று பலவகைகளிலும் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியை வரலாறு புகழ்ந்துரைக்கும்.
ஜெயலலிதாவின் அறிவையும், ஆற்றலையும் பெரிதும் மதித்து 'MASTER OF FACTS' என்றும், 'வியத்தகு நினைவாற்றல் கொண்ட தகவல் களஞ்சியம்' என்றும் பாராட்டியவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரணாப் என்ற பீனிக்ஸ் பறவை