ETV Bharat / state

பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து கலைஞர் நூலகமா? - அதிமுக கண்டனம்

author img

By

Published : Aug 1, 2021, 5:01 PM IST

சென்னை: மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கண்டனம்
அதிமுக கண்டனம்

சென்னை: இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதனை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் எதிர்கால தலைமறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் பேணிப் பாதுகாப்பது ஒரு நல்லரசின் கடமையாகும்.

அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய 'கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லம்' அரசால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதனை கலைஞர் நூலகமாக மாற்ற நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமையட்டும்

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பை மீறி, கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேகதாதுவில் நிச்சயம் அணை கட்ட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.