அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், தலைமைத் தேர்தல் அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டுத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு 19ஆம் தேதி மாலை 5 மணியுடன் தங்கள் தரப்பு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு முக்கிய தேர்தல் பொறுப்பாளர்களும், அதிமுகவினரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், தேர்தலுக்கு முந்தையக் கருத்துக்கணிப்பில் இரண்டு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும், அதிமுக வெற்றிப்பெறும் என கருத்துகள் வெளியாகி உள்ளது என குறிப்பிட்டிருந்த அவர், இந்தத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதைத் தெரிந்துக்கொண்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களான நேரு, எ.வ.வேலு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தேர்தல் நேரத்தில் கலவரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர்களிலிருந்து குண்டர்களை வரவழைத்து முண்டியம்பாக்கம் விருந்தினர் மாளிகை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள ரெசிடென்சியிலும், அங்குள்ள விடுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கவைத்துள்ளனர்.
மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளை கைப்பற்றிச் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுகவினர் செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்த அவர், வாக்காளர்களை மிரட்டி அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என கட்டயாப்படுத்த முயல்வதாகவும், அவர்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதுடன், அனைத்து வாக்குச்சாவடியிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி 2019 - சந்தைக்கு வந்த பசுமை பட்டாசுகள்!