ETV Bharat / state

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு! - etv bharat

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Aug 28, 2021, 5:31 PM IST

சென்னை: அதிமுக, பாஜக எதிர்பிற்கிடையே ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அரசு விவசாயிகளின் நலன் கருதி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் கட்டுபடுகிறோம். ஆனால் ஒன்றிய அரசின் இந்த மூன்று சட்டத் திருத்தங்களுக்கும் விளக்கம் கேட்கலாம்.

வேளாண் வல்லுநர்களை அணுகி இதில் உள்ள நுட்பங்களைக் கண்டறிந்து அதன்பிறகு இந்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தால் மக்களுக்கு பலன் இருக்கும். பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்" என்றார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

இதனிடையே பேசிய துரைமுருகன், "நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது தான் இந்தத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது நீங்கள் இது குறித்து விளக்கம் கேட்டு எத்தனை முறை கடிதம் எழுதினார்கள்? நேரடியாகக் கேட்கிறேன். இந்த சட்டத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்றார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், "மாநில அரசின் பட்டியலில் உள்ள இந்தச் சட்டங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தடையாக இருக்கிறது. இந்தச் சூழலில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய வல்லுநர்கள் உடன் கலந்து பேசக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது" என்றார்.

பாஜக வெளிநடப்பு

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தத் தீர்மானத்தில் கூட நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் ஒருமனதாக எனக் குறிப்பிட்டு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். இருந்தாலும் கூட பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். எனவே இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்" என்றார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருகிற வரை இந்தக் கொள்கை குறித்து ஒன்றிய அரசும் மாநில அரசும் எந்த முடிவும் எடுக்க முடியாது. அத்தீர்ப்பை பொறுத்து நாம் முடிவெடுக்கலாம்.

விவசாயிகள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் நலன் காப்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்க வேண்டிய முன்மாதிரியான பொறுப்பு நமக்கு உள்ளது. விவசாயிகளின் பக்கம் இருக்கும் நீங்கள் இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. இது குறித்து முதலமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்த போது இதுகுறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை. அதனால் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து முடிவெடுத்துள்ளோம்.

போராடும் விவசாயிகளை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, பணிவோடு கேட்கிறேன்" என்றார்.

அதிமுக வெளிநடப்பு

அதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், "இந்தச் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை உள்ளது. இதனால் சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவு எடுக்கலாம். மத்திய அரசை நேரில் சந்தித்து உரிய விளக்கம் கேட்கத் தயாராக இல்லாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்கிறது" என்றார்.

இதையும் படிங்க: பேரவையில் திமுக உறுப்பினரை எச்சரித்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.