ETV Bharat / state

விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! - சென்னை செய்திகள் இன்று

விஜயதசமி நாளில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

admission-of-students-in-government-schools-on-the-occasion-of-vijayadashami
விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 1:26 PM IST

Updated : Oct 23, 2023, 1:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தாெடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக விஜயதசமி நாளில் நடைபெறும். அதன்படி நடப்பாண்டிலும் விஜயதசமி நாளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள், உணவுத் திட்டம், உட்கட்டமைப்பு வசதி ஆகியவை குறித்து, பள்ளிகள் விளம்பரம் செய்து வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (அக். 24) விஜயதசமி பண்டிகையை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக அன்று கல்வி, கலைகளை கற்கத் தொடங்க அதிகளவில் ஆர்வம் காட்டப்படுகிறது. விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு : தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை! இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தல்!

Last Updated : Oct 23, 2023, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.