ETV Bharat / state

தமிழ்நாட்டில் நீதிமன்ற கட்டண உயர்வு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு! - increase in court fees in Tamil Nadu

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நீதிமன்ற கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai
author img

By

Published : Aug 11, 2020, 10:30 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வசந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில்," டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்காமல், சொற்ப தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து, 166 டாஸ்மாக் ஊழியர்கள், சென்னையிலுள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்களுக்கு கூடுதல் நேர பணி ஊதியம், தேசிய மற்றும் பண்டிகை கால விடுமுறை நாள்கள் ஊதியம் ஆகியவை பெற தகுதியுள்ளது எனக்கூறி, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பளித்தது. ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட 166 பேரும், தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமென்றும், அதற்கு ஒவ்வொருவரும் நீதிமன்ற கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென வழக்குரைஞர் கூறினார். அதன்படி, 166 பேரும் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நீதிமன்ற கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆனால், கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், ஒட்டுமொத்த ஊழியர்களுக்கு எதிராக ஒரே ஒரு ரிட் மனுவை அரசு தாக்கல் செய்யலாம். தனித்தனியாக அரசு வழக்கு தொடர வேண்டிய நிலை இல்லை. முன்பு 100 ரூபாயாக இருந்த நீதிமன்ற கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நீதிமன்ற கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அரசுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய கட்டணமாக 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், ரிட் (அப்பீல்) வழக்கை தாக்கல் செய்ய கட்டணமாக 200 ரூபாயிலிருந்து இருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. பிற மாநிலங்களில் நீதிமன்ற கட்டணம் உயர்த்தப்பட்டாலும், 200 ரூபாய் அல்லது அதற்கு குறைவாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் கூட இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய 500 ரூபாய் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில், 200 ரூபாய்தான் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ரிட் வழக்கிற்கு 1000 ரூபாயும், ரிட் மேல்முறையீட்டு வழக்கிற்கு 2 ஆயிரம் ரூபாய் என, அதிக கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது நியாயமற்றது.

தன்னிச்சையானதாகும். நீதி கேட்டு நீதிமன்றம் வருவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும், அதைப் பாதிக்கும் விதமாக கட்டணத்தை உயர்த்தியது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களிடமிருந்து மிகக் குறைந்த நீதிமன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிணை மனுவுக்கு 20 ரூபாய், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருப்பவர்களுக்காக தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுவுக்கு 20 ரூபாய் என்று சொற்ப தொகைதான் நீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. எனவே, ரிட் வழக்கிற்கு 1000 ரூபாய் என்றும், ரிட் மேல்முறையீட்டு வழக்கிற்கு 2 ஆயிரம் ரூபாய் என்றும் நீதிமன்ற கட்டணத்தை நிர்ணயித்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு நீதிமன்றம் கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டு சட்டத் திருத்தத்தை சட்ட விரோதம் என்றும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

இம்மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை ஆறு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட கட்சிகளை வீழ்த்தும் - அர்ஜூன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.