சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'பழங்குடி நாதம் 2019' எனும் பழங்குடியினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பழங்குடியினர் உதகமண்டலம் ஆய்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்திருந்தது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டார்.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், பாரம்பரிய முறையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஆயிரத்து 500 பழங்குடியின மக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !